சிக்கன் தொக்கு

Directions

  1. 1ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து நல்லா வறுத்து ஆறினதும் மிக்ஸி ஜார்ல அரைச்சுக்கோங்க.
  2. 2பேன்ல ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக்கோங்க.
  3. 3பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம் சேர்த்து நல்லா பொன்னிறமா வதக்கிக்கோங்க.
  4. 4இஞ்சி பூண்டு பேஸ்ட் ரெண்டு டேபிள்ஸ்பூன் சேர்த்து நல்லா மிக்ஸ் பண்ணி விடுங்க.
  5. 5தக்காளியை ஒரு மூணு சேர்த்து நல்லா வதக்குங்க.
  6. 6ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு, அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நல்லா வதக்கிக்கோங்க.
  7. 7காரம் ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள், மல்லி தூளையும் சேர்த்து நல்லா வதக்கி விட்டுருங்க.
  8. 8ஒரு கிலோ சிக்கனை சேர்த்து நல்லா கலந்து குடுத்துருங்க.
  9. 9தண்ணி எதுவும் சேர்க்க வேணாம், மூடி போட்டு லோ ஃபிளேம்ல ஒரு அஞ்சு நிமிஷம் குக் பண்ணுங்க.
  10. 10இப்ப நம்ம அரைச்ச பொடியை இதோட சேர்த்துக்கலாம்.
  11. 11ரெண்டு கொத்து கறிவேப்பிலை சேர்த்து நல்லா கலந்து குடுத்துருங்க.
  12. 12ரெண்டு நிமிஷம் அப்படியே விட்டுட்டு கடைசியா கொத்தமல்லி ஆட் பண்ணிட்டு சர்வ் பண்ணுங்க.

Ingredients

  • 1 டேபிள்ஸ்பூன் சீரகம்
  • 1 டேபிள்ஸ்பூன் சோம்பு
  • 1 டேபிள்ஸ்பூன் மிளகு
  • 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  • பட்டை
  • கிராம்பு
  • ஏலக்காய்
  • வெங்காயம்
  • 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 3 தக்காளி
  • 1 டேபிள்ஸ்பூன் உப்பு
  • 0.5 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • மல்லித்தூள்
  • 1 கிலோ சிக்கன்
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி

Equipment

பேன்ஸ்பேட்டூலாமிக்ஸி ஜார்மூடி