Dahi Tadka

5m
Serves 1
youtube.com

Directions

  1. 1கெட்டியான தயிரை எடுத்து அதில் உப்பு மற்றும் ஒரு துளி சர்க்கரை சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு பீட் செய்து, விஸ்க் செய்து கொள்ளவும்.
  2. 2நான்கு பல்லு பூண்டை பொடி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  3. 3ஒரு பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  4. 4ஒரு கடாயை எடுத்து, அதில் கொஞ்சம் நெய் சேர்த்து சூடுபடுத்தவும்.
  5. 5நெய் சூடானதும், அதில் சீரகம் சேர்க்கவும்.
  6. 6பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து நன்கு கிரிஸ்பியாக வதக்க வேண்டும்.
  7. 7நன்கு வதங்கியதும், சக்தி மசாலா சிவப்பு மிளகாய் தூள் மற்றும் கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
  8. 8மிளகாய் தூள் வதங்கியதும், அடுப்பை அணைத்துவிட்டு, பீட் செய்து வைத்துள்ள தயிரை சேர்க்கவும்.
  9. 9நறுக்கிய மல்லி தலையை சேர்த்து இறக்கினால், தஹி தட்கா தயார்.

Ingredients

  • கெட்டியான தயிர்
  • உப்பு
  • 1 துளி சர்க்கரை
  • 4 பல்லு பூண்டு, பொடி பொடியாக நறுக்கிய
  • 1 பெரிய வெங்காயம், பொடி பொடியாக நறுக்கிய
  • நெய்
  • சீரகம்
  • சக்தி மசாலா சிவப்பு மிளகாய் தூள்
  • மல்லி தழை, நறுக்கிய

Equipment

கடாய்விஸ்க்

Tips

  • அடுப்பை அணைத்துவிட்டு தயிர் சேர்க்கவும், இல்லையெனில் தயிர் திரிந்துவிடும்.