Tomato Kichadi

Directions

  1. 1தக்காளி, ஊறவைத்த வரமிளகாய், இஞ்சி, பட்டை, கிராம்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  2. 2கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
  3. 3முந்திரி பருப்பு சேர்த்து வதக்கவும்.
  4. 4பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. 5கேரட், பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணி சேர்க்கவும்.
  6. 6தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  7. 7அரைத்து வைத்த தக்காளி விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  8. 8தண்ணீர் சேர்த்து நன்கு கொதி வந்ததும், வறுத்து வைத்த ரவையைச் சேர்த்து கிளறவும்.
  9. 9நன்கு வெந்து வந்ததும், மல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

Ingredients

  • 2 எண்கள் தக்காளி
  • 3 எண்கள் ஊறவைத்த வரமிளகாய்
  • இஞ்சி
  • 1 சிறுதுண்டு பட்டை
  • 2 எண்கள் கிராம்பு
  • 2 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 மேசைக்கரண்டி நெய்
  • 0.5 தேக்கரண்டி கடுகு
  • 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
  • 1 தேக்கரண்டி கடலை பருப்பு
  • கறிவேப்பிலை
  • 1 பெரியது வெங்காயம்
  • முந்திரி பருப்பு
  • கேரட்
  • பீன்ஸ்
  • பச்சை பட்டாணி
  • 1 தேக்கரண்டி உப்பு
  • 0.25 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 4 கப் தண்ணீர்
  • 1 கப் வறுத்த ரவை
  • மல்லித்தழை

Equipment

மிக்ஸி ஜார்கடாய்