Mushroom Ghee Roast

Directions

  1. 1முதலில் 4 காஷ்மீர் சிவப்பு மிளகாய், 2 சாதாரண மிளகாய், 5-6 முந்திரிப்பருப்பு ஆகியவற்றை சுடுதண்ணீரில் போட்டு அரை மணி நேரம் ஊற விடவும்.
  2. 2ஒரு கடாயில் 1 ஸ்பூன் தனியா, 0.5 ஸ்பூன் மிளகு, 1 ஸ்பூன் சோம்பு, 1 ஸ்பூன் சீரகம், 0.25 ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து உலர் வறுப்பு செய்யவும்.
  3. 3நன்றாக வாசம் வந்தவுடன், 6 பல்லு பூண்டு, 0.5 துண்டு இஞ்சி சேர்த்து வறுக்கவும்.
  4. 4வறுத்த மசாலாக்களை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.
  5. 5ஊறவைத்த மிளகாய் மற்றும் முந்திரியையும் சேர்த்து அரைக்கவும்.
  6. 6கொஞ்சமாக புளியை 0.25 டம்ளர் தண்ணீரில் கரைத்து, அதையும் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து எடுக்கவும்.
  7. 7கடாயில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து, ஒரு பாக்கெட் மஷ்ரூமை வெட்டி சேர்க்கவும்.
  8. 80.25 ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து, மஷ்ரூமில் இருந்து தண்ணீர் வெளிவரும் வரை வறுக்கவும்.
  9. 9மஷ்ரூமில் இருந்து தண்ணீர் வெளிவர ஆரம்பித்தவுடன் அவற்றை கடாயில் இருந்து எடுத்துவிடவும்.
  10. 10அதே கடாயில், 2 ஸ்பூன் நெய் சேர்த்து, அரைத்து வைத்திருந்த மசாலா பேஸ்ட்டையும், கூடவே கொஞ்சம் தண்ணீரையும் சேர்த்து கலந்து விடவும்.
  11. 11இப்போது இந்த கிரேவிக்கு தேவையான அளவு உப்பு, 1 ஸ்பூன் வெல்லம், வறுத்து வைத்திருந்த மஷ்ரூம், கொஞ்சமாக கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கலந்து ஒரு ஐந்து நிமிடம் அப்படியே விடவும்.
  12. 12ஐந்து நிமிடத்தில் நெய் பிரிந்து மேலே வந்திருக்கும், சூப்பரான மஷ்ரூம் கீ ரோஸ்ட் தயார்.

Ingredients

  • 4 காஷ்மீர் சிவப்பு மிளகாய்
  • 2 சாதாரண மிளகாய்
  • 5 to 6 முந்திரிப் பருப்பு
  • 0.25 டம்ளர் தண்ணீர்
  • 1 ஸ்பூன் தனியா
  • 0.5 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 0.25 ஸ்பூன் வெந்தயம்
  • 6 பல் பூண்டு
  • 0.5 துண்டு இஞ்சி
  • 1 கொஞ்சம் புளி
  • 1 ஸ்பூன் நெய்
  • 1 பக்கெட் மஷ்ரூம்
  • 0.25 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 தேவையான அளவு உப்பு
  • 1 ஸ்பூன் வெல்லம்
  • 1 கொஞ்சம் கறிவேப்பிலை

Equipment

கண்ணாடி பாத்திரம்கடாய்மிக்ஸி ஜார்ஸ்பூன்தட்டு