Kayalpatnam Brain Fry

Directions

  1. 1இரண்டு மட்டன் பிரைன் எடுத்து, அதன் மேல் உள்ள லேயரை நீக்கி, நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
  2. 2ஒரு கடாயில் ஒன்றரை டேபிள்ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள், ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
  3. 3கலந்த மசாலாவில், சுத்தம் செய்து வைத்திருந்த மட்டன் பிரைனை அப்படியே முழுதாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  4. 4முதலில் ஒரு பக்கத்தை ஐந்து நிமிடம் வேகவைத்து, பிறகு உடையாமல் திருப்பிப் போடுங்கள்.
  5. 5இன்னொரு பக்கத்தையும் ஐந்து நிமிடம் வேகவைத்து, மசாலா நன்றாக வற்றியதும், ஒரு தனி தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  6. 6இப்போது ஒரு பான்-இல் மூன்று டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து, சூடானதும், வேகவைத்த மட்டன் பிரைனை முழுதாகச் சேர்த்து, இந்த மாதிரி வெட்டி விடுங்கள்.
  7. 7எல்லா பக்கமும் திருப்பிப் போட்டு, வெளிப்புறம் பொன்னிறமாக மாறி மொறுமொறுப்பானதும் எடுத்து விடுங்கள்.
  8. 8வெங்காயம், தக்காளி எதுவும் சேர்க்காமல், குழம்பு மிளகாய் தூள் மட்டுமே வைத்து இந்த பிரைன் ஃப்ரை தயாரிக்கப்பட்டுள்ளது.

Ingredients

  • 2 மட்டன் பிரைன்
  • 1.5 டேபிள்ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • உப்பு
  • தண்ணீர்
  • 3 டேபிள்ஸ்பூன் நெய்

Equipment

கடாய்ஸ்பேட்டூலாதட்டுஃப்ரைங் பான்

Tips

  • பிரைன் ரொம்ப நொறுங்கி போகாமல் ஓரளவுக்கு நம்மளுக்கு ஹோல் பீஸாவே கிடைக்கும். சாப்பிடுறதுக்கு ரொம்ப நல்லா இருக்கும்.