Instant Onion pickle

Directions

  1. 1ஒரு உரலில் பூண்டையும் வறுத்த வேர்க்கடலையும் சேர்த்து கொர கொரவென்று இடித்து எடுத்துக்கொள்ளவும்.
  2. 2வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  3. 3ஒரு பவுலில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இடித்த பூண்டு வேர்க்கடலை விழுது, காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
  4. 4நல்லெண்ணெயை சூடுபடுத்தி பவுலில் இருக்கும் மசாலாக்களுடன் சேர்த்துக்கொள்ளவும்.
  5. 5எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, கடைசியாக அரை எலுமிச்சைப் பழத்தின் சாற்றைப் பிழிந்து நன்றாகக் கலந்துவிட்டால் உடனடி வெங்காய ஊறு காய் தயார்.

Ingredients

  • 2 வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • கொத்தமல்லி இலை
  • 8 பூண்டு வேர்க்கடலை விழுது
  • 3 tbsp காஷ்மீரி மிளகாய் தூள்
  • 1 tbsp மல்லித்தூள்
  • 1 tsp கரம் மசாலா
  • pinch சாட் மசாலா
  • உப்பு
  • 0.5 கப் நல்லெண்ணெய்
  • 0.5 எலுமிச்சை சாறு
  • 4 tbsp வறுத்த வேர்க்கடலை

Equipment

உரல்கத்திபவுல்ஸ்பூன்கடாய்எலுமிச்சை சாறு பிழிப்பான்

Tips

  • தோசை, பூரி, சப்பாத்தி இவற்றுடன் இதைச் சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்