1குக்கரில் இரண்டரை டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
2இரண்டு துண்டு பட்டை, ஒரு அன்னாசிப் பூ, நான்கு கிராம்பு, இரண்டு பிரியாணி இலை, இரண்டு ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.
3பொடியாக நறுக்கிய மூன்று பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4பொடியாக நறுக்கிய மூன்று தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
5ஒரு மிக்ஸி ஜாரில் தோல் உரிக்கப்பட்ட பதினைந்து சின்ன வெங்காயம், ஐந்து துண்டு தேங்காய், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு டீஸ்பூன் கசகசா, பத்து முந்திரி சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு அரைக்கவும்.
6நன்கு வதங்கிய வெங்காயம் மற்றும் தக்காளியில் இரண்டு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் அரை கைப்பிடி புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.
7ஒன்றரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் மல்லித்தூள், ஒரு டீஸ்பூன் கரம் மசாலா மற்றும் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து மிளகாய்த்தூள் வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
8அரைத்து வைத்த வெங்காயம், முந்திரி, கசகசா பேஸ்ட், ஒரு கப் தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
9தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
10கால் டீஸ்பூன் சர்க்கரை மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கவும்.
Ingredients
2.5 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
2 துண்டு பட்டை
1 இ அன்னாசி பூ
4 இ கிராம்பு
2 இ பிரியாணி இலை
2 இ ஏலக்காய்
3 இ பெரிய வெங்காயம்
3 இ தக்காளி
உப்பு
15 இ சின்ன வெங்காயம்
5 துண்டு தேங்காய்
1 ஸ்பூன் சோம்பு
1 டீஸ்பூன் கசகசா
10 இ முந்திரி
2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
0.5 கைப்பிடி புதினா
1.5 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
1 டீஸ்பூன் மல்லித்தூள்
1 டீஸ்பூன் கரம் மசாலா
0.25 டீஸ்பூன் மஞ்சள்தூள்
0.5 டீஸ்பூன் சர்க்கரை
கொத்தமல்லி
Equipment
குக்கர்மிக்ஸி ஜார்கரண்டி
Tips
இந்த சால்னா செய்யறதுக்கு தேவாப்பத்தா பட்டாணி, கேரட் கூட சேர்த்துக்கலாம்.
காரம் கம்மியா சாப்பிடறவங்க ஒரு டீஸ்பூன் சேர்த்தாலே போதும்.
உப்பு சேர்த்துக்கங்க சீக்கிரமா வதங்கிடும் உப்பு சேர்த்துட்டீங்கன்னா.
மிளகாய்த்தூள் வாசனை இல்லாத அளவுக்கு நல்லா ஒரு வதக்கு வதக்கிடுங்க.
உடனே வந்து குக்கர் மூடி வச்சு மூடாதீங்க.
சால்னா வந்து நான் கெட்டியான சால்னா தான் வைக்கப் போறேன். அதனால தண்ணி வந்து ரொம்ப அதிகமா சேர்க்கல. கம்மியா சேர்க்குறேன். நீங்க கொஞ்சம் தண்ணியா வேணும்ன்றவங்க இன்னும் வந்து ஒன்றரை கப் அளவுக்கு சேர்த்துக்கலாம்.
சர்க்கரை சேர்த்தா அதோட டேஸ்ட் வந்து கொஞ்சம் ஸ்வீட்டா இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்.