11 1/2 கப் பச்சை பயிரை 3-4 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
2ஊறவைத்த பச்சை பயிரை மிக்ஸி ஜாருக்கு மாற்றி, ஒரு இன்ச் இஞ்சி, 5-6 பச்சை மிளகாய் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
3அரைத்த கெட்டியான விழுதை ஒரு பாத்திரத்துக்கு மாற்றி, ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
4ஒரு கை அளவுக்கு நறுக்கிய மல்லித்தழையை சேர்த்துக்கொள்ளவும்.
5ஒரு டீஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் சீரகப்பொடி, ஒரு டீஸ்பூன் சாட் மசாலா, ஒரு டீஸ்பூன் மிளகாய் பொடி, ஒரு டீஸ்பூன் கரம் மசாலா பொடி சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
6கலந்த மாவை கையால் உருட்டி, 1/2 இன்ச் சைஸ்க்கு வடை போல் தட்டி எடுத்துக்கொள்ளவும்.
7சட்னி தயார் செய்ய, ஒரு பானில் இரண்டு டீஸ்பூன் ஆயில், ஒரு பெரிய வெங்காயம், இரண்டு தக்காளி பழம், 15 பூண்டு சேர்த்து நன்கு வறுக்கவும்.
8வறுத்தவற்றை மிக்ஸி ஜாருக்கு மாற்றி, ஒரு டீஸ்பூன் ஆரிகானோ, 1/2 டீஸ்பூன் உப்பு, கொஞ்சமா சீஸ், 1/2 டீஸ்பூன் மிளகாய் பொடி சேர்த்து நைசாக அரைத்து சட்னியை தனியாக வைத்துக்கொள்ளவும்.
9தயார் செய்து வைத்துள்ள கட்லெட்களை மீடியம் ஹீட்டில் இருக்கும் ஆயிலில் சேர்த்து நன்கு பொரித்து எடுக்கவும்.
10கட்லெட்களை திருப்பி திருப்பி விட்டு கோல்டன் கலர் வரும் வரை பொரித்து வெளியே எடுக்கவும்.