Chicken Chinthamani

Serves 1
tiktok.com

Directions

  1. 1ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.
  2. 2அதனுடன் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி விடவும்.
  3. 3நான்கு பல் பூண்டை இடித்து சேர்த்து அதையும் நல்லா வதக்கி விடவும்.
  4. 4ஏழு காய்ந்த மிளகாயை விதை நீக்கி சேர்த்து அதையும் நல்லா வதக்கி விடவும்.
  5. 5சுத்தம் பண்ணி வச்ச சிக்கனை சின்ன சின்ன பீஸாக கட் பண்ணி சேர்த்துக்கொள்ளவும்.
  6. 6இப்ப அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள் சேர்த்து நல்லா வதக்கி விடவும்.
  7. 7இந்த சிக்கன் வேக எந்த தண்ணீரும் வேண்டாம், லோ பிளேமில் மூடி வச்சீங்கனா சிக்கனே தண்ணி விடும்.
  8. 8அப்படியே நல்லா வெந்துடும், இப்போ ஓபன் பேனில் நல்லா சுருள சுருள வதக்கி விட்டீங்கனா சூப்பரான சிக்கன் சிந்தாமணி ரெடி.

Ingredients

  • 3 ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 25 சின்ன வெங்காயம்
  • 1 கைப் கறிவேப்பிலை
  • 4 பல் பூண்டு
  • 7 காஞ்ச மிளகாய்
  • 500 கி சிக்கன்
  • 1 டீஸ்பூன் உப்பு
  • 1 மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் தனி மிளகாய் தூள்

Equipment

கடாய்ஸ்பூன்

Tips

  • இந்த ரெசிபிக்கு கண்டிப்பா சின்ன வெங்காயம் தான் சேர்க்கணும் அப்பதான் அதோட பிளேவர் சூப்பரா இருக்கும்.
  • சிக்கன் சின்ன சின்ன பீஸா கட் பண்ணி சேர்த்துக்கோங்க அப்பதான் பிளேவர்லாம் இறங்கி சாப்பிட சூப்பரா இருக்கும்.