1அரை கப் சர்க்கரையுடன் மூன்று ஏலக்காயை சேர்த்து நன்றாக அரைத்து பவுடர் செய்து கொள்ளவும்.
2ஒரு மிக்ஸிங் பவுலில் இரண்டு கப் மைதா மாவை சேர்த்துக்கொள்ளவும்.
3அத்துடன் அரைத்த சர்க்கரை பவுடர், கால் டீஸ்பூன் பேக்கிங் பவுடர் (அல்லது இரண்டு சிட்டிகை பேக்கிங் சோடா), மற்றும் இரண்டு சிட்டிகை உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
4நான்கு டேபிள்ஸ்பூன் உருகிய நெய் சேர்த்து, நெய் மாவுடன் நன்றாக கலக்கும் வரை இரண்டு நிமிடம் நன்றாக பிசையவும்.
5குறைந்த அளவு தண்ணீர் (சுமார் ஆறு டேபிள்ஸ்பூன்) சேர்த்து, மாவு ஒன்றாக வரும் வரை மெதுவாக பிசையவும்.
6பிசைந்த மாவை 10 நிமிடங்கள் மூடி வைத்து ஓய்வெடுக்க விடவும்.
7மாவு ரெண்டாக பிரித்து, கொஞ்சம் கனமான சதுர வடிவில் தேய்க்கவும்.
8கத்தி அல்லது பீட்சா கட்டர் பயன்படுத்தி கியூப் வடிவில் வெட்டிக்கொள்ளவும்.
9எண்ணெயை மிதமான சூட்டில் வைத்து, வெட்டிய மாவு துண்டுகளை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
10பொரித்த பிஸ்கட்டுகளை வடிகட்டி, சூடான அல்லது குளிர்ந்த நிலையில் பரிமாறவும்.