சோயா வறுவல்
Serves 1
tiktok.com
சோயா வறுவல்
tiktok.com
Serves 1
Save
Share
Export
Edit
Directions
1
கடாயில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.
2
ஏலக்காய், பட்டை, கிராம்பு சேர்க்கவும்.
3
அரை டேபிள்ஸ்பூன் சோம்பு, அரை டேபிள்ஸ்பூன் மிளகு, அரை டேபிள்ஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
4
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து பாதி வதக்கவும்.
5
ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து பிரட்டி விடவும்.
6
இரண்டு மீடியம் சைஸ் தக்காளி, தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சுருள வதக்கவும்.
7
ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் பிரட்டி ஸ்டவ்வை ஆஃப் செய்யவும்.
8
ஆறியதும் மிக்ஸர் ஜாரில் சேர்த்து பேஸ்டாக அரைத்து வைக்கவும்.
9
அதே கடாயில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய், பொடியாக நறுக்கிய 200 கிராம் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
10
நாம் அரைத்து வைத்த பேஸ்ட்டை ஊற்றி கலக்கவும்.
11
மிக்ஸர் ஜாரில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து ஊற்றவும்.
12
ஒரு டேபிள்ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள், அரை டேபிள்ஸ்பூன் தனியாதூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
13
ஊறவைத்த மீல் மேக்கரை சேர்த்து பிரட்டி விடவும்.
14
சோயா வெந்து வந்ததும், கடைசியாக கொஞ்சமாக மிளகுத்தூள் சேர்த்து பிரட்டவும்.
15
கொத்தமல்லியை தூவி பரிமாறவும்.
Ingredients
1 குழிக்கரண்டி எண்ணெய்
ஏலக்காய்
பட்டை
கிராம்பு
0.5 டேபிள்ஸ்பூன் சோம்பு
0.5 டேபிள்ஸ்பூன் மிளகு
0.5 டேபிள்ஸ்பூன் சீரகம்
இஞ்சி
பூண்டு
பச்சை மிளகாய்
சின்ன வெங்காயம்
1 கைப்பிடி கறிவேப்பிலை
2 மீடியம் சைஸ் தக்காளி
கல்லுப்பு
1 டீஸ்பூன் மஞ்சள்தூள்
200 கிராம் வெங்காயம்
1 டேபிள்ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள்
0.5 டேபிள்ஸ்பூன் தனியாதூள்
மீல் மேக்கர்
மிளகுத்தூள்
கொத்தமல்லி
Equipment
கடாய்
மிக்ஸி ஜார்