1ஒரு முக்கால் டம்ளர் அளவுக்கு துவரம்பருப்பு எடுத்துக் கொள்ளுங்கள்.
2ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம், மற்றும் மூன்று காஞ்ச மிளகாவை சேர்க்கவும்.
3ரெண்டு ஸ்பூன் ஓம வத்தையை கையில் நசுக்கி போடவும்.
4ரெண்டு ஸ்பூன் அளவுக்கு சாப்பாடு அரிசி சேர்த்து, நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
5இப்போ சால்னா செய்ய போகும் கடாயில், ரெடி பண்ண மசாலாவை சேர்த்து, இந்த மாதிரி ஒரு டம்ளர்ல 10 டம்ளர் தண்ணீர் ஊற்றி, ரெண்டு ஸ்பூன் கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்றாக எல்லாம் கரைத்து, அப்படியே அடுப்பில் வைத்து கிண்டிக்கிட்டே இருங்கள்.
6கொதிப்பதற்கு முன்னாடி கால் ஸ்பூன் மிளகாய் தூள், கொஞ்சமா வேக வைத்த உருளைக்கிழங்கு, மற்றும் ஓவர்நைட் ஊற வைத்த பட்டாணி, கொண்டைக் கடலியை நன்றாக வேக வைத்து சேர்த்து, நன்றாக கொதிக்க விட்டுடுங்க. அவ்வளவுதான் சால்னா ரெடி.
7ரெடிமேட் பானிபூரியை பொரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
8வெங்காயம், கேரட், புதினா எல்லாத்தையும் நன்றாக கலந்து விட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
9இப்போ வேக வைத்த உருளைக்கிழங்கு கூட கொஞ்சமா மிளகாய் தூள் சேர்த்து நன்றாக மேஷ் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.
10சின்னத்தில் ரெடி பண்ண பூரி, மிக்ஸ் பண்ண வெங்காயம், கொஞ்சமா ரெடி பண்ண சால்னா, ரெடி பண்ண உருளைக்கிழங்கு, இன்னும் கொஞ்சம் சால்னா ஊத்தி, மேல காண சேர்த்து, நன்றாக மிக்ஸ் பண்ணிவிட்டு, வீட்டில் உள்ள குட்டீஸ் கு கொடுத்து பாருங்க.
Ingredients
0.75 டம்ளர் துவரம்பருப்பு
1 ஸ்பூன் மிளகு
1 ஸ்பூன் சீரகம்
3 காஞ்ச மிளகா
2 ஸ்பூன் ஓமம்
2 ஸ்பூன் சாப்பாடு அரிசி
10 டம்ளர் தண்ணீர்
2 ஸ்பூன் கரம் மசாலா
உப்பு
0.25 ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
வேகவைத்த உருளைக்கிழங்கு
பச்சை பட்டாணி
வெள்ளை கொண்டைக்கடலை
பாணிபூரி
வெங்காயம்
கேரட்
புதினா
Equipment
கண்ணாடி கிண்ணம்அகப்பையடம்ளர்மிளகாய்மிக்ஸிகடாய்ஸ்பூன்வடிகட்டிவறுத்தெடுக்கக்கூடிய ஸ்பூன்தட்டு
Tips
ஓமம் வத்தையை கையில் நசுக்கி போடவும், வாசம் நன்றாக தூக்கி கொடுக்கும்